கனவுகளும் சுகமானதே

கனவுகளை விரட்டிவிடாதீர்கள்.

காதல் மனைவியை கனவில்
காண்பதும் காதல் அதிசயமல்ல.
ஆழமான காதல் அரவமில்லாமல்
அவ்வப்போது கனவிலும் எட்டிப் பார்க்கிறது.
கொடுத்து வைத்தவர்தான்.

நினைக்கவிடாமல் உம் காதல்
நித்திய நிசமாக கனவுகளில் பதிவு செய்கின்றன
நிறைந்த அனுபவங்களை.
கனவுகள் நிசங்களின் நிழல்கள்.

சரீரம்தானே தூங்குகிறது.
நினைவுகள் தூங்குவதில்லை.
நினைவின் பதிவுகள் நிசமான
நித்திரையில் கனவுகளாக மலர்கின்றன.

நிகழ்வுகளும் நினைவுகளும் நலமானால்
கனவுகளும் சுகமானதே!

அமைதித் தோட்டத்தில் பூக்கும்
அன்பின் பூக்கள் ஆனந்த சுகந்தம் வீசி
காதல் தேனை கனவில் கசியவிடுகின்றன.
வாயை மொச்சுக்கூட்டிய வண்ணம்
வக்கணையாக நினைவுகளை அசைபோட்டு
கனவுகளை சுகமாக சுவையுங்கள்.

அவசரப்பட்டு தூக்கம் கலைத்து
கனவுகளை விரட்டிவிடாதீர்கள்.

கொ.பெ.பி.அய்யா.

எழுதியவர் : கொ.பெ.பி.அய்யா. (26-Nov-13, 8:50 am)
பார்வை : 252

மேலே