அன்புவிழி கொடு

மான் விழியும் வேண்டாம்
மயக்கும் மைவிழியும் வேண்டாம் !

மீன் விழியும் வேண்டாம்
வெட்டும் வாள்விழியும் வேண்டாம் !

மருண்ட விழியும் வேண்டாம்
பிறரை மிரட்டும்விழியும் வேண்டாம் !

காந்த விழியும் வேண்டாம்
கவிதை பொழியும்விழியும் வேண்டாம் !

அகந்தை விழியும் வேண்டாம்
அலையும் விழியும் வேண்டாம் !

அனைத்துயிரையும் நேசிக்கும் அன்புவிழி கொடு
கயவர்க்கும் உதவும் கருணைவிழி கொடு !!

எழுதியவர் : வானதி (26-Nov-13, 1:56 pm)
பார்வை : 198

மேலே