விழியில்லையோ இறைவா

மான் விழியாம்
மயக்கும் மைவிழியாம்

மீன் விழியாம்
வெட்டும் வாள்விழியாம்

மருண்ட விழியாம்
இழுக்கும் காந்தவிழியாம்

கயல் விழியாம்
பிறர்க்கான கருணைவிழியாம்

நீல விழியாம்
அழகிய தாமரைவிழியாம்

சுடர் விழியாம்
சுடும் நெருப்புவிழியாம்

இத்தனை விழிகளில்
ஒருவிழி எனக்குக்கொடுக்க
உனக்கு விழியில்லையோ இறைவா
நான் என்செய்வேன் !!!

விழியற்றோருக்கு விழியைக்கொடு

அன்றேல்
மனிதர்க்கு கண்தானம்
செய்யும் மனம்கொடு ...

எழுதியவர் : வானதி (26-Nov-13, 1:50 pm)
பார்வை : 97

மேலே