ஓர் பெண்ணின் குரல்

ஓடும் பேருந்திலே ஓய்ந்து போனது ஒருத்தியின்
ஓலமும் உயிரும்...
அமிலத்தின் ஆற்றலிலே அழிந்து போனது ஒருத்தியின்
அழகும் உயிரும்...
என் அரணான சகோதரர்களும் அன்பான நண்பர்களும்
வாழும் இம்மண்ணிலே ,
ஏன் சில அறிவற்ற அசுரர்களையும் பெற்றெடுத்தாய்
என் தாய் திரு நாடே.............?
கறியும் சாதமும் ஊட்டுவதற்குப் பதில்
வெறியும் போதையும் ஊட்டி வளர்த்தாயோ
சில அரக்கர்களுக்கு மட்டும்..?
பதில் சொல் என் பாரத மாதாவே.......!!
இனி எப்படி என் உளமார உறுதி எடுப்பேன்,
இந்திய மக்கள் "அனைவரும்" என் உடன் பிறந்தவர்கள் என்று....?
உன் கருவறை மட்டுமே என் உயிருக்கு
உத்திரவாதமான இடம் இந்நாட்டிலே
உன்னுள்ளே என்னை மீண்டும் உள்வாங்கிக்கொள்வாயா
என் உன்னத தாயே..................????