வாழ்ந்து காட்டு

நண்பா ....

வெற்றி பெற்ற
மனிதர் எல்லாம்
துன்பம் சகித்தவரே ...

துன்பம் சகித்த
மனிதர் எல்லாம்
சாதித்து காட்டியவரே ....

சாதித்து காட்டிய
மனிதர் எல்லாம்
தடைகள் தாண்டியவரே ....

தடைகள் தாண்டிய
மனிதர் எல்லாம்
சிகரம் தொட்டவரே ....

சிகரம் தொட்ட
மனிதர் எல்லாம்
சிறப்பு மிக்கவரே ....

சிறப்பு மிக்க
மனிதர் எல்லாம்
வாழ்ந்து காட்டியவரே ....

துன்பம் சகிக்க கலங்காதே,
தோல்வி கண்டு வருந்தாதே,
துன்பம் கூட ஒரு நாள்
இன்பமாக மாறும் .....

எப்படியும் வாழலாம்
என்று நினைக்காதே ....
இப்படி தான் வாழ வேண்டும்
என்று வாழ்ந்து காட்டு .....

வெற்றி என்றும்
உனது பக்கமே .....
சாதனையாளரின்
பட்டியல் உனக்காக காத்திருக்கிறது ....
துணிவுடன் வாழ் .....

எழுதியவர் : Beni (27-Nov-13, 8:21 pm)
Tanglish : vaalnthu kaattu
பார்வை : 346

மேலே