முந்திய முந்தானை

உன் மார்போரம் முகம்
வைத்து பால்குடிக்க
நீ எங்கே?

வாயில் விரல் வைக்கிறேன்
வேப்பெண்ணை தடவ
நீ எங்கே?

ஓட்டைக்கொலாய் அவிழ்கிறது அரைஞான்
கயிறு சரி செய்ய
அப்பா எங்கே?

அம்மம்மம்மம்மா! கேளுங்களே எஞ்சங்கதியே...
எனக்கு ஒரு அப்பா-என்
அம்மாவுக்கு இரண்டு புருஷன்...

எனக்கு ஒரே ஒரு அம்மா
என் அப்பாவுக்கு இரண்டு மனைவி...

தாலிக்கு முன் ஒரு முந்தானை
பின் ஒரு முந்தானை...

எழுதியவர் : (27-Nov-13, 11:56 pm)
பார்வை : 207

மேலே