அன்புள்ள காதலே
குயில்களின் கானமே
சிறந்தது
என்றெண்ணினேன்!!
நம் மனதை இணைத்த
மௌன ராகத்தை
உணரும் வரை!
அகராதி முழுதும்
அலசி விட்டேன்!
இன்னும் கிட்டவில்லை..
மொழிகள் மறந்த
என் உணர்வுகளை
கவிதை ஆக்கிட!
மூச்சு காற்றும்
எட்டி விடாத
தூரத்தில் பயணம்..
இருந்தும் தோன்றும்
பேதையின் நெஞ்சில்
புதிதாய் ஒரு சலனம்!
பார்த்து பழகி
பகிர்ந்திடா புன்னகை..
இன்று
மனம் புரிந்து
தவழ்கிறது
நம் இதழ்களில்!
என்னவென்று தெரியாத
ஏதோவொன்று
என்னிலும் உன்னிலும்
இசை மீட்டி மருகிடுதே!!
இது தான் நேசமோ..
புரியாத பாசமோ!
வீரனே..
வித்தகனே..
விந்தை கவிஞனே!
உன்னிடமே கற்று கொண்டேன்..
காதலை மறைக்கவும்..
கண்மூடி ரசிக்கவும்!
என் முகம் தேடி
முதல் முறையாய்
மூச்சிரைத்த
உன் அகம் காண
வந்து விட்டேன்
இணைந்திருக்க!
காலம் முழுதும்
உன் நிழலாய் வாழ
கனவுகள் ஆயிரம்
உண்டு எனக்கு!
சம்மதமா இது உனக்கு!