தெரு சிறார்கள்

பிறந்த நாள்
முதல்
தெருவோடு
வாழ்வு !!!!


மழையோடும்
வெயிலோடும்
விளையாட
சொல்லி தரவில்லை !!!
மாறாக
கற்றுகொண்டோம்
விலகி இருக்க!!!


பள்ளி செல்பவர்களை
பாதையில்
பார்த்ததுண்டு
பசியோடு !!!
வருந்தவில்லை
வயிற்று பசி
சொல்லி
கொடுத்திருக்கிறது
உழைத்து
உணவு
தேட!!!


ஆயிரம் தேடலுக்கு
நடுவே
எங்கள் தேடலோ
குப்பை தொட்டியில் !!!!பனி செய்யும்
அந்த தொழிலாளர்களின்
வருகைபதிவேடு
80 விழுக்காடு தான்
100 விழுக்காடு
நாங்கள் பெற்று
இருக்கிறோம்
எங்கள்
குப்பைதொட்டி எனும்
பள்ளியில்!!!

காலங்கள்
காயபடுத்தினாலும்
கலங்கியதில்லை
கனவுகளும்
எங்களுக்கு
இல்லை !!!!
காரணம்
தெரியவில்லை !!!

"பல வீடுகள்
இணைந்தது
ஒரு
தெருவாம் "
யாரோ
சென்னார்கள் ...........
தெருவே
வீடாய் நிற்கும்
எங்களை
பற்றி பேச
யாரும் இல்லை!!!

எழுதியவர் : sasikumar (28-Nov-13, 7:08 pm)
Tanglish : theru sirargal
பார்வை : 152

மேலே