திருமண நாள் வாழ்த்து
பத்து மாதம் சுமந்து பெற்ற -என்
பத்தரைமாற்றுத் தங்கமே ....!
பத்தாம் ஆண்டு திருமண நாளில்
பத்தினி பிள்ளைகளோடு பல்லாண்டு வாழியே ....!!
தலைமகனாய் பிறந்திட்ட அருந்தவப் புதல்வனே !
விலை மதிப்பில்லா மாணிக்கமே ....!
வலைவீசித் தேடினாலும் கிட்டாத பொக்கிஷமே !
சிலைபோலும் வாழ்வரசியைக் கொண்டவனே ....!!
சோதனைகள் வந்தாலும் சோர்ந்துவிடாதே !
வேதனைகள் இடைவரினும் வாடிவிடாதே !
போதனைகள் இவையென்று எண்ணிவிடாதே !
சாதனைகள் படைக்கத் தயங்கிவிடாதே !
நடப்பவை எல்லாம் நலமாகட்டும் !
நினைக்கும் நல்லன நிறைவேறட்டும் !
நிம்மதி மனதில் குடிகொள்ளட்டும் !
நலமாய் வாழ்வு ஒளிவீசட்டும் ....!!
தமிழும் இனிமையும் போல்
வீணையும் நாதமும் போல்
நீவிர் இருவரும்
இன்ப துன்பங்களிலும்
இணை பிரியாது
இனிதே இல்லறம் நடத்திட
அம்மாவின் அன்பு வாழ்த்துக்கள் .....!!