எங்கேயடா நீ,,,,,,,,,
தன்மான தமிழனென
தலை நிமிர்ந்து
வாழ்ந்தோமே !!
தமிழீழம் தொலைத்து
தறி கேட்டு
போனோமே!!!
நான் கொண்ட
கோபம் தனை
நீ இன்று
கேட்பாயே - தோழா
நீ இன்று
கேட்பாயே
வங்க கடலினை
வழி அனுப்பி
வைத்தேன் -அங்கே
வருந்தும் எம்
சகோதரரின்
நிலை அறிய
வந்து சொன்னது
அவர் நிலையை
"சுனாமி" அலைகளாய்
கடலுக்கு வந்த
வேகம் கூடவா
உன்னிடம் இல்லை
சிற்றெரும்பு
புற்றிடித்தாலும்
நம் இடம்
நம் இனம் என்று
எறும்புகள்
படை எடுக்குமே
அந்த ஐந்தறிவு
ஜீவனுக்குள்ள
கோபம் கூடவா
உனக்கு இல்லை
ஆறறிவு பெற்ற
ஆணவமோ ???-
இல்லை
அதிகாரம் கண்டு
அழிந்து விட்ட
ஆண்மையோ ???
நடிகனுக்கு
பாலாபிசேகம்
தலைவனுக்கு
பிறந்தநாள் கொண்டாட்டம்
பட்டாசு வெடித்து
குதுகலமாய்
கொண்டாடுகிறாயே,,,,,,,,,,
உனக்கு
கேட்கவில்லையா,
துப்பாக்கி முனையில்
மடிந்து விழும்
உன் தொப்புள் கொடியின்
"ஓலம் "