இன்றைய என் கணவன்

"இன்றைய என் கணவன்"

உனைநோக்கித் தவமிருக்கும்
என் எண்ணங்களின் வரிசைகள்
நீண்டுக்கொண்டே போகின்றன

இந்த வாயிற்தோரணங்களுக்கு
தெரியவில்லை

வா வா என்று அழைத்திடும்
அனைவரிடமும்
அந்த எண்ணங்கள் ஏலம் போகிறதை

நிஜங்கள் எனக்களித்தப் பரிசு என்பது
மேடையில் பிணமாக
கட்டிலில் ஜடமாக
உயிரில் இரணமாக
அவன் தந்துசென்றது மட்டும்தான்

நீயும் நினைக்கவொரு
நினைவிருக்கிறதா என்றான்

தெரியவில்லை

அவன் கைவிட்டுச் சென்ற
காதல் எண்ணிக்கை நினைவுகள்
அவனை நினைக்கிறதோ இல்லையோ

என்னைக் காதலித்துக் கைவிட்டதால்
இனி நான் நினைத்துவிட
அவனின் நினைவுகள் இருக்கிறதாக என்றேன்

அவன் உப்புமூட்டை சுமந்து
முதுகுப் பிரவேசம் கொண்டுவிட்ட
என் மார்புக் காம்புகள்
இன்றைய ஆக்கிரமிப்புகளி லெல்லாம்
கூசிட மறுக்கின்றன

பிணைக்கைதியின் ஆசைகளை
நிறைவேற்றிடும் சட்டங்கள்
இந்த இருட்டறைச் சத்தத்தில்
தோற்றுத்தான் போகிறது எதற்கோ

காற்றுக் கொடுத்த
கடன் தென்றலை
தீண்ட விடாமல் செய்கின்ற
என் இலேசான தேகக்கூறுகள் எல்லாம்

அரைக்கச்சுகளாலே வரிக்கட்டிய
சிறைக் கம்பிகளாக இன்று

உருவி இடுகிற சொற்களை
உயிரிலே தொடுக்கின்ற கறடுகளாக
நான் இங்கு எதற்கென்றால்

மூன்று வேளை சோற்றுக்கும்
என் சொல்லுக்கும் மட்டுமே என்றான்

"இன்றைய என் கணவன்"

அனுசரன்

எழுதியவர் : அனுசரன் (29-Nov-13, 4:47 pm)
Tanglish : indraiya en kanavan
பார்வை : 203

மேலே