தரமான கல்வி வேண்டும்
கல்வி வேண்டும் எம் மக்களுக்கு தரமான கல்வி வேண்டும்!
ஒன்றும் இரண்டும் மூன்று என்றறிவோம்
ஆனால் ஒன்றும் இரண்டும் ஏன் மூன்று என்றறிய
கல்வி வேண்டும் எம் மக்களுக்கு தரமான
கல்வி வேண்டும்!
வானில் நிலவுண்டு என அறிவோம்,
அனால் வானில் ஏன் நிலவுண்டு என்று அறிய
கல்வி வேண்டும் எம் மக்களுக்கு தரமான
கல்வி வேண்டும்!
தவறை கண்டும் காணாமல் செல்ல கோழை ஒன்றும் இல்லை
தவறை தட்டி கேட்கும் தைரியம் எள
கல்வி வேண்டும் எம் மக்களுக்கு தரமான கல்வி வேண்டும்!
ஏற்றமும் தாழ்வும் பணத்தை பொறுத்து அல்ல
குணத்தை பொறுத்து என்று உணர
கல்வி வேண்டும் எம் மக்களுக்கு
தரமான கல்வி வேண்டும்!
முட்டாள் என்று எவரும் இல்லை..
ஒவ்வொரு உயிருக்கும் ஓர் தனித்தன்மை உண்டு..
அதன்மையின் சீற்றம் அறிய
கல்வி வேண்டும் எம் மக்களுக்கு
தரமான கல்வி வேண்டும்!
தெளிவு வேண்டும் ,தன வாழ்கைக்கு என்ன தேவை என்று புரிந்துகொள்ள
கல்வி வேண்டும் எம் மக்களுக்கு
தரமான கல்வி வேண்டும்!
தனம்பிக்கை வேண்டும், தான் சாதிக்க பிறந்தவனென்று புரிந்துகொள்ள
கல்வி வேண்டும் எம் மக்களுக்கு
தரமான கல்வி வேண்டும்!
தீண்டாமையை ஒழிக்க வேண்டும் ,
ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைதரம் உயர
கல்வி வேண்டும் எம் மக்களுக்கு
தரமான கல்வி வேண்டும்!
தாய்தந்தையே உங்களுக்கும் வாழ்கை என்று ஒன்று உண்டு..
எமக்கு சொத்து சேர்த்துவதை விடுத்தது சிறிது உங்களுக்காகவும் வாழுங்கள் என்று கூற...
கல்வி வேண்டும் எம் மக்களுக்கு
தரமான கல்வி வேண்டும்!