கனவு மெய்ப்பட வேண்டும்
மனமே!
வெற்றியுடன் செயல்படு - அந்த
வானமும் உனக்கு வசப்படும் ...
அந்த -விடியலுக்கு காத்திருப்பதை விட
உன் முயற்சியால்
விடியலை உண்டாக்கு !..
தோழா!
விளையட்டாய் இருந்தது போதும்..
இனி...
பட்டம் விளையாடும் குழந்தைகள் -கூட
பதக்கம் பெற வைப்போம் !!- புது
உலகை படைக்க செய்வோம் ...
உன்னுள் இருக்கும் நம்பிக்கை- சிறகொடிந்து
இருப்பதற்கு அல்ல- மனிதா!
சிறகடித்து பறப்பதற்கு !...
உன்-
தன்னம்பிக்கையால் முயற்சி
செய்யும் வரை - சந்தர்ப்பமும்
தூங்கிக் கொண்டுதான் இருக்கும் ...
உசுப்பிவிடு உன் ஆற்றலை - உன்னோடு
நானிருக்க துணிவோடு செல்- அந்த
முழுமதியையும் பறித்து வருவோம்..
வான் மேகத்தின் பன்னீர் துளிகளில் -உன்
கண்ணீர் துளிகளெல்லாம் கரைந்து
போகட்டும் !..
இனி!
கண்ணுக்குள்ளே கணினி வைத்து - புது
உலகை ஆள்வோம் ...
இளைஞனே !..
கனவு காணுங்கள் -உறக்கம்
கலையும் வரை அல்ல
உன் இலக்கை அடையும் வரை !..

