தலையணை

ஒவ்வொரு நாளும் நான்
அவனுடன் படுக்கையில் படுத்துக்கொண்டு
அனுபவிக்கும் சுகமே தனி...

அவனை நான்

இருக்கிக்கட்டிப்பிடிக்கையிலும்...
மேலே எறிப்படுத்துக்கொண்டு
நசுக்கையிலும்...

தூக்கி வீசிப்பிடித்து
விளையாடிய போதும்...

அவனுக்கு

கூச்சம் தோன்றவில்லை...
மூச்சும் முட்டவில்லை...

அவன்

பயமும் கொள்ளவில்லை...
பதிலடியும் தரவில்லை...

இப்படி அவன் என்றுமே
பொறுத்துக்கொண்டான் - எல்லாவற்றையும்...

இதுபோக ஒன்று...

நான் அவன்மீது தலைவைத்து
உறங்கியபின் என்னைத்தாங்கி
தனி சுகம் தந்தான்...





(தன் கணவனைப் பிரிந்து மனைவி,தவிப்புடன் பெரும் சுகம்...)

எழுதியவர் : திருமூர்த்தி (30-Nov-13, 1:30 pm)
Tanglish : thalaiyanai
பார்வை : 505

மேலே