காதலில் மட்டும் தான்

ஜனனமும் மரணமும் ஒரே நொடியில்
காதலில் மட்டும் தான்
இன்பமும் துன்பமும் ஒரே பொழுதில்
காதலில் மட்டும் தான்
சொர்கமும் நரகமும் ஒரே நேரத்தில்
காதலில் மட்டும் தான்
புன்னகையும் கண்ணீரும் ஒரே வேலையில்
காதலில் மட்டும் தான்
விட்டு கொடுப்பதும் வீண் சண்டை போடுவதும்
காதலில் மட்டும் தான்
மனிதனை வாழ வைப்பதும் காதல் தான்
வீழ வைப்பதும் காதல் தான்!

எழுதியவர் : நர்மதா (30-Nov-13, 3:09 pm)
பார்வை : 116

மேலே