மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்

அன்று :
மயங்கினேன்டா மயங்கினேன்டா
மனம் கொள்ளை கொள்ளும்
மன்மதச் சிரிப்பில் மயங்கினேன்டா

நினைத்தேன்டா நினைத்தேன்டா
நித்தம் நித்தம் நினைவில்
நின்னையே நினைத்தேன்டா

உணர்ந்தேன்டா உணர்ந்தேன்டா
உன்மத்தம் கொண்டு உமையாள்
உயிராய் உனை உணர்ந்தேன்டா

சிரித்தேன்டா சிரித்தேன்டா
சிந்தை தொலைந்து பிறர்
சிரிக்கும்படி சிரித்தேன்டா

தயங்கினேன்டா தயங்கினேன்டா
தடைசொல்லும் நாணத்தால்
தன்னிலை பெற்று தயங்கினேன்டா

உருகினேன்டா உருகினேன்டா
காதல் கடலில் விழுந்து
கன்னி மலர் கசிந்துரிகினேன்டா

இன்று :
தவிக்கிறேன்டா தவிக்கிறேன்டா
தாளாமல் தளர்கொடியால்
தன்னந் தனியாய் தவிக்கிறேன்டா

கலங்குறேன்டா கலங்குறேன்டா
கண்விழியில் கண்ணன் உனைக்
காணாமல் கலங்குறேன்டா

குழம்பறேன்டா குழம்பறேன்டா
குடிகொள்ள நீயின்றி
குறிஞ்சிமலர் குழம்பறேன்டா

மருகறேன்டா மருகறேன்டா
மாற்றானை நோக்க
மனையில் மருகறேன்டா

வாயேன்டா வாயேன்டா
வான் புரவியில்
வஞ்சிமகளைக் காண வாயேன்டா

தாயேன்டா தாயேன்டா
தங்கத் தாலியினைத்
தாராமாக்கத் தாயேன்டா

பின்பு :
உருகுவேன்டா உருகுவேன்டா
உன் அணைப்பில்
உள்ளம் குளிர்ந்து உருகுவேன்டா

உறைவேன்டா உறைவேன்டா
உன் சிறு பிரிவிலும்
உணர்வற்று உறைவேன்டா

சிவப்பேன்டா சிவப்பேன்டா
சிந்தை குழைந்து
சின்னப் பரிசத்தில் சிவப்பேன்டா

சினுங்குவேன்டா சினுங்குவேன்டா
சின்னச் சின்ன உன்
சில்மிஷத்தில் சினுங்குவேன்டா

எழுதியவர் : வானதி (30-Nov-13, 1:06 pm)
பார்வை : 236

மேலே