கல்லறை பேய்கள்

காம பிசாசுகளே!
உங்களின் காமவெறிக்கு அழகான பெண்மையை
கடித்து குதரும் கயவர்களே! தெருநாய்களே!
உங்களின் செயலால் அங்கே ஒரு
குடும்பமே கதறி அழுது கண்ணீர் வடிக்கின்றது
அவர்கள் வைத்த அன்பும் பாசமும்
உங்களுக்கு எங்கே தெரியபோகிறது.

தாயையும் சகோதரிகளையும் தான் பெற்றகுழந்தையையும் காமமாக பார்க்கும் காட்டுமிராண்டிகள் தானே நீங்கள்
அந்த பாசமும் பரித்தவிப்பும் பாவிகாளே
உங்களுக்கு எங்கே தெரிய போகிறது
மிருகத்தைவிட கேவலமான உங்களின் சாவு
உடனே அமையாது நடை பிணமாகவே அலைவீர்கள்.

தாய்மையின் உணர்வைகூட தவறாக பார்க்கும்
உங்களுக்கு எங்கே தெரியும் உங்களை பெற்றதும்
ஒரு தாய் தான் என்று-கைகுழந்தையையும் காமத்திற்கு பலியாக்கும் இந்த காம வெறி பிடித்த
ஓநாய்கள் கல்லறை ஆவது எந்நாளோ!

காதலெனும் உயிர் கலந்த அன்பை காமத்திற்கு
கேவலப்படுத்தும் கல்நெஞ்சகாரர்காளே உங்களுக்கும்
ஒன்று சொல்கிறேன் உங்களின் காமத்திற்கு
உயிருள்ள காதலை பலியாக்காதீர்காள்!

பெண்மை தரும் அளவற்ற அன்பை
வெறும் காமமாக பார்க்கும் இந்த
காட்டேரிகள் அனைவரும் கல்லறை பேய்களே!

எழுதியவர் : ஆறுமுகம் (30-Nov-13, 3:42 pm)
சேர்த்தது : ARUMUGAM
Tanglish : kallarai peigal
பார்வை : 245

மேலே