மனதின் குமறல்
கொஞ்சி பேசிய வார்த்தைகள்
என்னை கொன்ற அவலங்கள்
அன்பு காட்டிய உள்ளங்கள்
மறைந்து போன மர்மங்கள்
பூத்து குலுங்கிய புன்னகைகள்
புதைந்து போன புதையல்கள்
எழுதி வைத்த காவியங்கள்
என்னை காயபடுத்திய குறிப்புகள்
மனம் தந்த மாற்றங்கள்
மலையாய் நின்ற கோபங்கள்
உள்ளம் கொண்ட ஆசைகள்
கரைந்து போன அஸ்திகள்
உறவு கொண்ட நெஞ்சங்கள்
என்னை வெட்டிய கோடாரிகள்
இறைவனிடம் கேட்ட வரங்கள்
எனக்கு தந்த சாபங்கள்
எழுத நினைத்த வரிகள்
இறுதி ஊர்வல சடங்குகள்...