வருக வருக

வருடங்கள் ஓடி விட்டது !
வாக்குறுதிகள் வாய்பிளந்து விட்டது !
பல முறை மனு கொடுத்தாயிற்று !
சாலை இன்னும் சங்கடத்தில் தான் இருக்கிறது !

எப்பொழுதுதான் நல்லதொரு
சாலை அமைப்பார்கள் ?
மருத்துப்போன இதயத்தோடு வெறுத்துப்போய்
நடந்து கொண்டிருந்தவர்களுக்கு ஒரே ஆச்சர்யம் !

சாலை அமைக்கும் பணி துரிதமாய்
நடந்து கொண்டிருந்தது !
இதில் ஆச்சரியம் கொள்ள என்ன இருக்கிறது ?
ஆம் ! ! !
.........
..........
..........
அடிக்கல் நாட்டு விழா ஒன்றிற்கு
அடுத்த வாரம் அமைச்சர் வருகிறார்.....!

எழுதியவர் : ஜெகதீசன் (1-Dec-13, 12:29 am)
பார்வை : 159

மேலே