துணிவோடு வாழும் ஒரு பெண்ணின் கதை

அழகிய ஒரு குடும்பத்தில் இரண்டாவது மகளாக வாழ்ந்தாள் ஒரு பெண்.

படிப்பிற்கு பெயர் போன அவளை மட்டும் நன்றாக படிக்க வைத்தனர் அவளது பெற்றோர் .

எங்களால் தான் படிக்க முடியவில்லை...
எங்கள் மகளாவது நன்றாக அவள் விரும்பிய அளவுக்கு படிக்க வைக்க வேண்டும் என்பது பெற்றோரின் விருப்பம்...

ஆசையை நிறைவேற்றும் வண்ணமாக அந்த பெண்ணும் தன்னால் இயன்ற அளவு கடின உழைப்போடு படித்தாள் .....

தனது முதுகலை படிப்பில் கல்லூரியில் தனது துறையில் அனைத்து பருவ தேர்வுகளிலும் முதல் மாணவியாக வந்தாள் ....

அப்போது தான் அவளது மனதில் தோன்றுகிறது ...

============================================

2006 ம் வருடத்தில் அவள் கல்லூரியில் தனது இளங்கலை படிப்பை படித்து கொண்டு இருந்தாள் .

அவளுக்கு ஒரே ஒரு அண்ணன் இருந்தான்....

படிப்பு என்றாலே அவனுக்கு
விஷம் சாப்பிட்டதை போன்று இருக்கும் ....

அவனும் கல்லூரியில் தனது இளங்கலை மூன்றாம் ஆண்டு படிப்பை படித்து வந்தான். அனைத்து பருவ தேர்வுகளிலும் அவனுக்கு அர்ரியர் என்பது நிச்சயம் ...
ஒரு முறை அவன் தனது கல்லூரி மாணவர் பேரவை தலைவரோடு இணைந்து ஒரு மாணவரை தாக்கி விட்டார்.

கல்லூரி முதல்வரிடம் இருந்து ஒரு கடிதம் அவளது தந்தைக்கு வந்தது, உடனடியாக கல்லூரிக்கு வரவும் என்று .....

பதறி போனார் அந்த அன்பு தந்தை. தனது மகளையும் தன்னுடன் கூட்டி கொண்டு கல்லூரிக்கு சென்றார்.

அப்போது துறைக்கு வந்த துறைத்தலைவர் : நீங்கள் யார் என்று கேட்டார். தான் இன்னாருடைய தந்தை என்று பதில் சொன்னார் அந்த தந்தை. எதுவும் பேசாமல் உள்ளே சென்று விட்டார் அந்த துறைத்தலைவர்.

துறைக்கு வெளியே நின்ற அவளையும் அந்த தந்தையையும் அங்கும் இங்கும் செல்பவர்கள் ஒரு மாதிரியாக பார்த்து சென்றனர். அந்த தந்தையின் மனதில் பெரிய கவலை.

சில மணி நேரங்கள் கழித்து இருவரையும் உள்ளே அழைத்து அவளது அண்ணனை பற்றி எல்லாவற்றையும் சொல்ல தொடங்கிய துறைத்தலைவர், அந்த தந்தையை உட்கார கூட சொல்லவில்லை ...

அனைத்தையும் கேட்கும் போது அந்த தந்தையால் தலை நிமிர்ந்து கூட பார்க்க இயலவில்லை ....

எல்லாவற்றையும் தனது மனதில் அவள் வைத்து கொண்டாள் ....

அவள் மனதில் ஒரு எண்ணம் :

எனது அண்ணனால் எனது தந்தை தலை குனிந்து நின்றார் .. என்னால் எனது தந்தை தலைநிமிர்ந்து நிற்க வேண்டும் என்று நினைத்தாள் அவள் .....

=============================================

அவள் படித்து கொண்டு இருக்கும் போது ஒரு நாள் அவள் தந்தை தற்செயலாக அவள் கல்லூரிக்கு வந்தார்.

துறைத்தலைவரை பார்க்க வந்த தந்தையிடம் நீங்கள் யார் என்று கேட்டார் துறைத்தலைவர்.
நான் இன்னாருடைய தந்தை என்று சொன்ன போது, வாருங்கள்...இந்த நாற்காலியில் அமருங்கள் என்று துறைதலைவரே நாற்காலியை தூக்கி போட்டார் ....

ஒரு நிமிடம் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்றுவிட்டார் அந்த தந்தை....
என் மகன் எனக்கு தரவேண்டும் என்று நான் நினைத்த பெருமையை எனது மகள் எனக்கு தந்திருக்கிறாள் என்று ......

கண்ணீர் தான் வந்தது அந்த தந்தைக்கு ....
ஆனந்த கண்ணீர் .....

===============================================

படிப்பிற்கு என்றும் முடிவு இல்லை என்பதை போல , அவள் தனது முதல் முதுகலை படிப்பையும் முடித்தாள்...

தனது தந்தையின் விருப்பபடி தனது இரண்டாவது முதுகலை படிப்பையும் படிக்க விரும்பினாள்...

அதற்குள் அவளுக்கு ஒரு கல்லூரியில் வேலை கிடைத்தது. வேளையில் சேர்ந்து 7 மாதத்தில் அவள் விரும்பியது போல வேலை பார்த்து கொண்டே படிக்க வாய்ப்பு கிடைத்தது ....

11 மாதத்தில் தனது வேலையையும் ராஜினாமா செய்தாள். அடுத்த 8 மாதத்திற்குள் அவளுக்கு மறுபடியும் இன்னொரு கல்லூரியில் வேலை கிடைத்தது.

மகிழ்ச்சியோடு வேலைக்கு சேர்ந்த அவள் இன்றும் தனது படிப்பை தொடர்ந்துகொண்டு இருக்கிறாள்.

இதற்கு மேலும் படிக்க வேண்டும் என்ற ஆசையோடு விடா முயற்சியோடு போராடுகிறாள் .
அவளது ஆசை, தான் ஒரு முனைவர் ஆக வேண்டும் என்பதே...

துணிவோடு முயற்சி செய்யும் அவளது எண்ணம் வெற்றியை நோக்கி பயணித்து கொண்டே இருக்கிறது ...

அவளது வெற்றிகள் இன்னும் தொடரும் என்ற உறுதியோடு வாழ்கிறாள் ....

==============================================

அவளது சரித்திரம் இன்னும் முடியவில்லை ...
இப்போது தான் ஆரம்பமாகி இருக்கிறது ...

தொடரும் அவள் சாதனைகள்

எழுதியவர் : Beni (1-Dec-13, 11:45 am)
பார்வை : 442

மேலே