ஒரு கிழவி தோண்டும் அரசாங்கம்

சுதந்திரத்தின் வயதையொத்த
ஜனநாயகத்தைப் போல
உடல் மெலிந்த
கிழவி ஒருத்தி
கோணிப்பை வாழ்க்கையை
முதுகில் சுமந்தபடி
நடுங்கும் விரல்களால்
தெருவோரத்திலிருக்கும்
குப்பைக் கிடங்கிலிருந்து
தனக்கான உணவைத் தோண்டுகிறாள்
வெளிப்படுகிறது
முடை நாற்றமெடுக்கும்
பன்னாட்டு உணவுக் கழிவுகளும்
பிராந்திப் பாட்டில்களும்
நெகிழிப் பைகளும்
இன்ன பிற
அரசாங்கம் தோண்டிய புதையல்களும்.