உன் தாயை உணர்கிறேன் நான்

சமையலறையில் சதமடித்து
உணர்வுகள் சலனமற்றுப் போன உன்
தாயை உணர்கிறேன் நான் !

கூரியநகங்களால் உணர்வுகளை
கீறிய போதெல்லாம் இரவின்
இருளில் கரைந்து போன
இதயத்தின் கனத்தை அறிகிறேன்!

சாய்வு நாற்காலியில் சுகமாய்
சாய்ந்து அதட்டி அழைக்கும்
உன் அப்பாவின் குரலுக்கு
அவள் மனதுக்குள் எறிந்த
வார்த்தைகளை கேட்கிறேன்!

உன் தந்தையின் மரணத்தில்
கண்ணை நீர் நனைக்காது
ஒரு பெரு மூச்சுடன் அமர்ந்த
அவள் மௌனத்தை நான்
மொழி பெயர்க்கிறேன் !

காலம் காலமாய் ரகசியங்களை
சுமந்தலையும் காற்று போல
அவள் சுமந்த வெறுமையின்
ரகசியங்களை நான் உணர்கிறேன் !

தன வாய் மொழிக்கு காதோர்க்கும்
விற்பனைப் பெண்ணிடம் விடாது
பேசியதை வேடிக்கை பார்த்ததுண்டு !

அவள் ஆத்மாவின் அழுத்தம் என்மேல்
இடியாய் இறங்கிய போதெல்லாம்
மதி கெட்டுப் போனதுண்டு!

அவள் தனிமையின் தவிப்பை
அவள் மௌனத்தின் இரைச்சலை
அவளை சுட்ட நெருப்பை
தினந்தோறும் உணர்கிறேன் நான் !

எழுதியவர் : thilakavathy (1-Dec-13, 9:43 pm)
பார்வை : 124

மேலே