வரமான சாபம் நான்

மீண்டும் ஒருமுறை
உன் பற்றிய நினைவுகளை
மீட்டிக் கொள்கிறேன்
கத்தியின்றி ரத்தமின்றி
என்னை காயம் செய்தவளே
நித்தம் என்னை சத்தம் இன்றி
கொன்று தின்றவளே
உன் ஒரு நொடிப் புன்னகையால்
ஆயிரம் பட்டாம் பூச்சிகளின் சிறகடிப்பில்
ஒரு துளி மின்சாரம் பாய்ந்து சில்லுச் சில்லாய் சிதறியது போல் சுக்குநூறாய் நொறுங்கிப் போனேன்
இன்று சொல்கிறேன்
உன் காதல் -உயிர் பருகும் விஷம்
உன் காதல் -உடல் எரிக்கும் ஏறி நெருப்பு
உன் காதல் - சுகமான வலி
உன் காதல் - வரமான சாபம்
வரமொன்றால் சபிக்கப் பட்டதால்
உன் கால் பட்டு கல்லாகிப் போனேன் இன்னுமொருமுறை உன் பார்வை பட்டால் - என் ஜென்ம சாபம் தீர்ப்பேன்
ஒரு முறையேனும் பார்த்துவிட்டுப் போ
உன்னை எண்ணியே எங்கும்
என் இதயத்தை