திசைத்தெரியாமல்

எங்கு ஏற்றிச்செல்லப்படுகிறோம்
என்று தெரியாமல்
கூண்டுக்குள் அடைபட்ட
என்றோ ஒரு நாள்
யாரோ ஒருவருக்கு
இரையாகப்போகும்
கோழிகளைப் போல...

சில நேரங்களில்
திசைத்தெரியாமல்
பயணப்படுகிறோம்
யாரோ ஒருவருக்காய்...

எழுதியவர் : சூர்யமதி. (2-Dec-13, 10:36 pm)
பார்வை : 84

மேலே