பூ மயிலு

மாமரத் தோப்புக்குள்ள
மத்தியான வேளயில
மடியிலகொஞ்சம் சாஞ்சுக்கவா பூ மயிலு ...!

ஒழச்சுஓஞ்சி களச்சிப்புட்டோம்
பொறுப்பநாம முடிச்சுபுட்டோம்
நமக்காவ வாழ்ந்திடுவோம் பூ மயிலு ...!

சேத்துபணத்த வச்சதால
பெத்தபுள்ளைக்கும் பாரமில்ல
சொத்துசொகம் எனக்குநீதான் பூ மயிலு ....!

பகலெல்லாம் தோப்புக்குள்ள
பசுமையான நெனவுதுள்ள
பழையகத பேசுவோமா பூ மயிலு .....!

அக்கம்பக்கத்துல ஆருமில்ல
துக்கம்மனசுல ஏதுமில்ல
வெக்கத்தவிட்டு கிட்டவாயேன் பூ மயிலு ....!

இருவதுவயசுல தாலியகட்டுனேன்
இன்னவரைக்கும் வேலியாயிருந்தேன்
இப்பக்கூட காதல்பண்ணுறேன் பூ மயிலு ....!!!

(முதுமையில் மனைவியுடன் காதல் சுகமானது )

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (2-Dec-13, 11:11 pm)
பார்வை : 211

மேலே