மயக்கம் ஏனோ

உன் அருகில்..,
ஏனோ இந்த மயக்கம்
எப்போதுமில்லாமல்
இன்று மட்டும்..,
எதற்காக இந்த தயக்கம்
இங்கிருந்தும் எங்கோ இருப்பதாய்..,
என் அருகில்..,
யார் என்பதும் இன்று மறக்க நேர்ந்ததே..,
என் கண்கள் மட்டும்..,
ஏனோ ஒரு பயத்தில்
இருந்தும் கண்ணீராய் பாஷை பேசுகிறது..,
நான் உனக்கு..,
என்ன துரோகம் இளைத்தேனடா
ஏன் இப்படி கொல்கிறாய்.,
என்னவனே..,
ஏனடா என்னை வதைக்கிறாய்
நான் சொல்வது..,
இன்னுமா உனக்கு புரியவில்லை..,
தயவு செய்து நீ பாடல் பாடுவதை - மன்னிக்கவும்
கத்துவதை நிறுத்திவிடு - இல்லை
எங்காவது ஓடி விடு...,