அன்புக் கண்மணிக்கு

என் வேர்களில் நீ
மரமாகலாம்
மண்ணின் ஈரம்
அறியாது போவாய் !
என் சிறகுகளில் உன்
சுமை சாய்க்கலாம்
பறக்கும் விந்தை
புரியாது போவாய் !
என் கனவுகளை நான்
கடனாய் தரலாம்
விடியல் என்பதே
உணராது போவாய் !

உன் வேர் ஊன்றி நீர் தொடு !
உன் சிறகசைத்து வான் தொடு !
உன் கனவுகளால் விழித்தெழு !
உன் உலகம் சமைத்திடு - அதில்
எனக்கும் இடம் கொடு .
என் கனவே, கண் மணியே
என் இதயத்தின் இளந்துடிப்பே !!!

எழுதியவர் : thilakavathy (4-Dec-13, 12:11 am)
பார்வை : 75

மேலே