கிராமத்து பெண் குழந்தை
இன்று அமைதியாக நான் உறங்கி கொண்டு இருக்கிறேன்... தாயின் கருவறையில்....என்னை எதிர்ப்பார்த்து தாயும் தந்தையும் விழிமேல் விழி வைதுக்காத்துக் கொண்டு இருக்கிறார்கள் .... அவர்களைக்கான வேண்டி சந்தோஷத்தில் என்னை அறியாது என் தாயை உதைத்து வெளியேறிய எனக்கு... மீண்டும் அமைதியாய் உறங்க இடம் கொடுத்தார்கள் .... கள்ளிப்பால் கொடுத்து கல்லறையில் ... பத்து மாதம் பெற்று எடுத்த தாயே நீயும் ஒரு பெண் என்பதை மறந்து என்னை கொல்ல நினைத்த காரணம் சரிதானா அம்மா?????? உன்னை உதைத்து வெளியேறிய பாவத்துக்கு இத்தண்டனையா ?????அல்லது பெண்ணாக பிறந்த பலனிற்கு இத்தண்டனையா????? தாய் பாலிற்காக ஏங்கிய எனக்கு கள்ளிப்பால் கொடுத்து உறங்க வைத்த தாயே உனக்கு பெண்ணாக பிறந்த எனக்கு இக்கள்ளிபால் கூட அமிர்தமாக ருசித்து என் நாவிற்கு தெரிந்ததினாலே...அம்மா நான் அமைதியாய் உறங்கி கொண்டு இருக்கிறேன்........