தூரிகை
உன் முகம்
வரைய
நினைத்தேன்
என் மனமெனும்
காகிதத்தில்
மிக சிறந்தவை
கொண்டே
வரையவேண்டும்
தீர்க்கமாக
முடிவெடுத்தேன்
மயிலின் நீலம்
போதுமா
உன்
கண்ணின்
அழகை காட்ட
இரவின்
கருமை
போதுமா
உன் மீசையின்
வலிமை
காட்ட
நெருப்பின்
சிகப்பு
போதுமா
உன்
கோபம்
காட்ட
அலையின்
வெண்மை
போதுமா
உன் சிரிப்பை
காட்ட
சிப்பிக்குள்
பிறந்த
"முத்து"- நீ
உன்னை
சிறந்த
முறையில்
வரைந்து
வைக்க
என்ன செய்ய
வேறெங்கிலும்
வேண்டாம்
என் கண்ணின்
மணி எடுத்தேன்
உன் கண்கள்
வரைந்தேன்
என் கூந்தல்
முடி எடுத்தேன்
உன் மீசை
வரைந்தேன்
என் குருதி
சிகப்பெடுத்தேன்
உன் கோபம்
வரைந்தேன்
என் நெஞ்சின்
வெளுமை எடுத்தேன்
உன் சிரிப்பு
வரைந்தேன்
இதோ முடிந்தது
சிறப்பான
சித்திரம்
நீ
உன்னை
வரைந்த
தூரிகை
நான்