செய்தியும் சிந்தனையும் கவிஞர் இரா இரவி

செய்தியும் ! சிந்தனையும் ! கவிஞர் இரா .இரவி !

இன்று தி இந்து தமிழ் நாளிதழில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் விளபரம் ஒன்று பார்த்தேன் .

தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர்
திரு. திருமலை அவர்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர் என்றாலும் .தந்தை பெரியார் பற்றாளர் அவரிடம் அன்பான வேண்டுகோள் தயவு செய்து சோதிட பட்டயப் படிப்பை நீக்கி சமுதாயம் சிறக்க உதவுங்கள் .


சோதிடவியல் ஓராண்டு பட்டயப் படிப்பு அறிவிப்பு வந்துள்ளது. சோதிடவியல் படிப்பை ரத்து செய்ய வேண்டும் .சோதிடம் என்பது அறிவியல் அன்று .மூட நம்பிக்கை .அறிவியல் பூர்வமான கருத்துக்களை மட்டுமே மக்களிடம் அரசு கற்பிக்கப்பட வேண்டும் என்று இந்திய அரசியல் சட்டம் சொல்கின்றது . சோதிடம் மதம் சார்ந்தது .மத சார்பற்ற அரசு பல்கலைக்கழகம் சோதிடத்தை பாடமாக பட்டயப் படிப்பாக கற்பிப்பது சட்டத்திற்கு முரணானது .

எனவே எல்லா பல்கலைக்கழகமும் சோதிடக் கல்வியை ரத்து செய்ய வேண்டும் .பித்தலாட்ட சோதிடம் கல்வி அன்று. சோதிடம் அறிவியல் அன்று .

ஒரு மனிதனின் பிறந்த நேரத்தை வைத்து சாதகம் எழுதுகின்றனர் .பிறந்த நேரமே யாருக்கும் சரியாகத் தெரியாதபோது .சோதிடம் எப்படி உண்மையாகும் .பிறந்த சில நிமிடங்கள் கழித்து வந்து செவிலியர் சொல்லும் நேரத்தை பிறந்த நேரம் குறிக்கின்றனர் .பிறந்த நேரத்தை வைத்து சாதகம் எழுதுகின்றனர் .


சாதகத்தை வைத்து திருமணப் பொருத்தம் பார்க்கின்றனர்.எல்லாப் பொருத்தம் உள்ளது என்று சொல்லி திருமணம் செய்கின்றனர் .சில நாட்களில் சண்டை வந்து மணவிலக்கு கேட்கின்றனர். சிலர் எந்த பொருத்தம் , சோதிடம் பார்க்காமல் திருமணம் செய்கின்றனர் . பல்லாண்டுகள் சண்டை இன்றி ஒற்றுமையாக வாழ்கின்றனர்.

ஒருவரின் சாதகத்தை மூன்று சோதிடர்களிடம் கொடுத்து சாதக பலன் தனித்தனியாக எழுதச் சொல்லிப் பாருங்கள். மூன்றும் ஒரே மாதிரி இருக்கவே இருக்காது .மூன்றும் மூன்று மாதிரியாகவே இருக்கும் .

நாளிதழ்களில் வரும் ராசி பலனை படித்துப் பாருங்கள் .ஒரே ராசிக்கு ஒரே மாதிரிதான வர வேண்டும் ஒவ்வொரு நாளிதழிலும் ஒவ்வொரு மாதிரி இருக்கும் .சோதிடம் அறிவியல் என்றால் இப்படி வேறுபாடு ஒரே ராசிக்கு ஒரே நாளில் வருமா ? சிந்திக்க வேண்டாமா ?

சுனாமி வரும் என்று எந்த சோதிடரும் சொல்லவில்லை. சொல்லி இருந்தால் ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றி இருக்கலாமே !சோதிடர்களுக்கு தெரிந்தால்தானே சொல்வார்கள்.

கண்ணன் என்ற சோதிடர் 5 கொலைகள் செய்து இப்போது சிறை சென்றுஉள்ளார் .அவர் சாதகத்தை அவர் கணித்து இருக்கலாமே .இப்படிதான் பல சாமியார்கள் சோதிடம் சொல்லி பித்தலாட்ட்டம் செய்து வருகின்றனர் .சோதிடர்கள் தொல்லை சாமியார்கள் தொல்லை தினசரி செய்தி வருகின்றது .

சோதிட பட்டியப் படிப்பு வேறு படித்து விட்டால் நாட்டில் பித்தலாட்ட சோதிடர் பெருகி விடுவார்கள் .நாட்டில் தொல்லை இன்னும் அதிகம் ஆகி விடும் .எனவே பணத்தாசை காரணமாக
பல்கலைக் கழகத்தினர் பித்தலாட்ட சோதிடத்தை பாடமாக கற்பிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் .

தந்தை பெரியார் சொன்னது போல எதையும் ஏன் ? எதற்கு ? எப்படி ? எதற்கு ? எதனால் கேட்டுப் பாருங்கள் .

மாமனிதர் அப்துல் கலாம் சொன்னது .

" எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு .ஆனால் ஆயிரம் ஆயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள கிரகங்கள் மனித வாழ்வில் ஆதிக்கம் செலுத்தும் என்பதில் எனக்கு துளியும் நம்பிக்கை இல்லை ."

எழுதியவர் : செய்தியும் ! சிந்தனையும் ! (4-Dec-13, 9:14 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 94

சிறந்த கட்டுரைகள்

மேலே