இரத்த பாசம்

காதல் இல்லா உலகத்தில்
பெண்கள் மதிக்க படுவதில்லையாம்....
ஆண்கள் அழகை பார்த்ததில்லையாம் ...

அதனால் தான் என்னவோ ..
காதல் உள்ள நம் உலகத்தில் ......
சில ஆணும் பெண்ணும் காதலை மதிப்பதில்லை ....

அன்பே காதல் என்றார்கள் ..
ஆசையே காதல் என்றார்கள்..
மோதலே காதல் என்றார்கள்...
வாழ்ந்து காட்டுவதே காதல் என்றார்கள்..
பார்க்காமலே காதல் என்றார்கள்..
சொல்லாமலே காதல் என்றார்கள்...
காதலுக்கு கடிதம் எழுது என்றார்கள்...
காதல் கவிதை எழுத சொன்னார்கள் ...
சொன்னால் தான் காதலா என்றார்கள்...
புரிந்துகொள்வதே காதல் என்றார்கள்..
புரியவைப்பதும் காதல் என்றார்கள்..
பள்ளிக்கு செல்லும் போதே காதல் என்றார்கள்..
பைத்தியக்காரனுக்கும் காதல் இருக்கும் என்றார்கள்..
நடப்பே காதல் என்றார்கள் ...

எல்லா காதலையும் சொல்லிவிட்டார்கள்..
காதல் இல்லாமல் இரண்டாம் உலகம் இல்லை என்றார்கள்....
எல்லாம் சொல்லிவிட்டார்கள்..
காதலுக்கு மரியாதை கொடுத்து விட்டார்கள்...

இவைகள் காதலுக்காக அல்ல....
இவைகள் காதலர்களுக்காக அல்ல...
இவைகளை பார்த்தாவது உண்மை காதல் செய்யுங்கள் என்று....

" காதலிக்கும் போது நீ அவளிடம் ரசித்த அழகை மறவாதே ..
காதலிக்கும் போது நீ அவனிடம் பார்த்த ஆண்மையை மறவாதே ....

இவைகள் என்றாவது ...

ஒரு நாள்
உன் கண்ணில் இருந்து மறைந்தால்
அன்று நீ அவனையோ அல்லது அவளையோ உண்மையாய் காதலிக்கவில்லை என்று அர்த்தம்...

குழந்தை குமரி ஆனாலும் அல்லது கிழவன் ஆனாலும் ..
தாயின் பார்வைக்கு குழந்தை என்றும் குழந்தைதான்...

தாய் முதன் முதல் தனது குழந்தையை ..
கையில் வாங்கி அனைத்ததை மறக்க மாட்டாள்..

காதலும் அப்படித்தான் ...
உண்மை காதல் தாயும் சேயை போல...
நிறமும் மாறாது குணமும் மாறாது என்றும் ...

காதல் செய்யுங்கள் .....

எழுதியவர் : சாமுவேல் (5-Dec-13, 10:40 am)
Tanglish : iratha paasam
பார்வை : 181

மேலே