,,,,,,,,, நீ ,,,,,,,,,,,,
எதிலும் ஒட்டாமல்
பாதரசமாய்
இருந்தவள் நான்
என்று கலந்தாய்
எப்படி கலந்தாய் - என்னுள்
உன்னை அன்றி
எதுவுமில்லா
நிலை தந்து
நில்லாமல் போய்விட்டாய்
மண்ணில் சொட்டும்
மழை நீரில்
மறையாத உன்
மகரந்த புன்னகை
மறைந்து கொண்டு
நான் அழ
கிடைத்ததிந்த
மழை எனக்கு
பேசாமல்
சென்றிருக்கலாம்- நீ
பதிவு செய்ய
ஏதுமில்லாமல்
போயிருக்கும் -என்னில்
நினைவில்
விதைத்துவிட்டு
நிஜத்தை
அறுவடை
செய்து விட்டாய்
உதிர்ந்தது போன
நெல் மணியென
சிதறி போன
வாழ்வானது
எனக்கு
வேறுகளம்
தேவையில்லை
வேட்டகத்தாரும்
விடுவதாயில்லை
போராட்ட
வாழ்வானது
பொய் கூறுவதே
பிழைப்பானது
மாதம் தோறும்
பெண் பார்க்கும்
படலம்
மாறாமல்
உன் நினைவு
தொடரும்
வாழவும்
முடியாமல்
சாகவும்
முடியாமல்
எனக்கொரு
விதியா
என்னை
வதைத்திட
வந்தவனா நீ
வாழ்வளித்து
செல் -இல்லை
வழியனுப்பி
செல்
உள்ளம் கூட
உடையவில்லையடா
என் உற்றாரால்
உடைகிறேன்
தினமும் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,