சேலை கட்டி வந்தவளோ

சேலை கட்டி வந்தவளோ!
ஆளைத் தட்டி விட்டவளோ!
பாலை மனம் பாலுற
வாலை வனம் ஆனவளோ!

என்ன அது வாசமோ!
வண்ணச் சேலை வீசுமோ!
எண்ணம் அது மீறியும்
என்னைத் தூண்டும் நேசமோ!

கூடும் உறவின் பொழுதிலோ!
தேடும் சுகம் ஆய்விலோ!!
நனைந் தூறும் ஈரமும்
கலைந்(த) சேலை வசந்தமோ!

சேலைக் கென்ன மகிமையோ!
வேளைக் கென்ன விளக்கமோ!!
பார்க்கப் பார்க்கக் காதலும்
சேரச் சேரத் தூண்டுமோ!

கொ.பெ.பி.அய்யா.

எழுதியவர் : கொ.பெ.பி.அய்யா. (5-Dec-13, 12:00 pm)
பார்வை : 1905

மேலே