குப்பையும் வார்த்தைகளும்

குப்பையைக் கொட்டினான்
கூட்டி அள்ளினான
இடம் சுத்தம் ஆனது

வார்த்தைகளை கொட்டினான்
வம்பை விலைக்கு வாங்கினான்.
இடம் ரண களமாயிற்று.


குமித்து வைத்த குப்பையை
சேகரித்து தூரப் போட்டான்
இடம் துலங்கியது பளிச்சென்று.

கொட்டிய வார்த்தைகளை
திரும்பிப் பெற முடியாமல் திணறினான்
இடம் கும்மிருட்டாகி விட்டது.

குப்பையை விட வார்த்தைகள் மோசம்
குப்பை அழிந்து போகும் சுவடில்லாமல்
வார்த்தை நின்று நிலைக்கும் அச்சுப பிசகாமல்

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (5-Dec-13, 10:48 pm)
பார்வை : 275

மேலே