களை

சாதிக் களை விளைந்திருக்கு குருவி
சாதிக் களை விளைந்து படர்ந்திருக்கு..!!
குழந்தை பெயர் கேட்டா லறிந்திடும்,
பாலினம் போல – என் குருவி,
சாதிப்பெயர் கேட்டா லுடன் மதமும் தெரிந்திடுது.,
இனத்திற்கு இனம் தான் பெயர் தேவை குருவி,
இங்கு இனத்திற்குள்ளேயே பல பெயர்கள் குருவி,
ஆளுக் கொருபெயரும் அழைத்திட உண்டு,
அவை பின்னிலும் சாதி இணைப்பவருண்டு,
என் குருவி உன் இனத்தில் சாதிகள் இல்லை,
ஆண் பெண் எனவும் வேறுபாடு இல்லை,
நான் மீண்டும் பாரதி வேண்டுகிறேன்.
இச்சாதிச் சமுதாயத் திலிருந் தெம்மை மீட்க,
அன்றுன் னிடத்தில் வருவேன் என் குருவி
மனிதனாகப் பறந்திடவே.