பினு ஸ்ரீராம் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : பினு ஸ்ரீராம் |
இடம் | : கோயம்பத்தூர் |
பிறந்த தேதி | : 27-Sep-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 04-Dec-2013 |
பார்த்தவர்கள் | : 89 |
புள்ளி | : 19 |
வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
வாழிய வாழிய வே!
வான மளந்த தனைத்தும் அளந்திடும்
வண்மொழி வாழிய வே!
ஆண்: நள்ளிரவும் முழு நிலவும் நீயும் நானும் மௌனமும்.
ஒன்றாய் ஓரிடத்தில்..!!
இந்த நிமிடம், இந்தத்தருணம்
தொலையாமல் தங்காதா?
பெண்: நள்ளிரவும் முழு நிலவும் நம்மை விட்டுப் போனாலும்
நான் இருப்பேன் உன் அருகினிலே…
இந்த நிமிடம் இந்தத் தருணம் எங்கும் போகாது
நம்முடனே தொடர்ந்திடும்…
ஆண்: இந்த உலகினில் நமக்கென்று ஓரிடம் தேடி பயணம் செய்வோம்
வெகுதூரத்தில் தனிமையில் குடில் அமைத்து புகுந்திடுவோம்
உனக்கென நானும் எனக்கென நீயும் நாமாக அங்கே வாழ்ந்திடுவோம்
பெண்: நிரந்தர இடமொன்று தேவையில்லை பயணிப்போம் இறுதிவரை
இந்த உலகமே தனிமைதான் நீ அருகில் இருந்தாலே..
நாமாக நாம் வாழ நாம் மட்டும் போ
உனக்காய் மீண்டும் மீண்டும்
எதையோ எழுதுகிறேன்..!!!
அனைத்தும் கவிதை என,
அவற்றை நீ நேசிக்கிறாய் - ஆனால்
நீ அறிவாயா..?
உன்னை நேசிப்பது என் கவிதையல்ல !!
நான்.
உனக்காய் மீண்டும் மீண்டும்
எதையோ எழுதுகிறேன்..!!!
அனைத்தும் கவிதை என,
அவற்றை நீ நேசிக்கிறாய் - ஆனால்
நீ அறிவாயா..?
உன்னை நேசிப்பது என் கவிதையல்ல !!
நான்.
என் இரவுகளின் தூக்கங்கள்
உன்னால்தான் கலைகிறது
உரசி உரசி நீ செய்த
தொல்லைகள் தினமும் தொடர்கிறது
காதுகளில் நீ பேசிய –காதல்
மொழி இன்னும் ஒலிக்கிறது
என்னை மெல்லமாய் கடித்து
செல்லமாய் அடிகளும் பெற்றுக்கொள்கிறாய்
அத்தனை இரவுகளிலும் – உன்
ஆளுகையினால் என்னை
அயர வைக்கிறாய் – இன்று
உனக்கென வாங்கிவிட்டேன்
.......
ஓர் கொசுவத்திச் சுருள்
சாதிக் களை விளைந்திருக்கு குருவி
சாதிக் களை விளைந்து படர்ந்திருக்கு..!!
குழந்தை பெயர் கேட்டா லறிந்திடும்,
பாலினம் போல – என் குருவி,
சாதிப்பெயர் கேட்டா லுடன் மதமும் தெரிந்திடுது.,
இனத்திற்கு இனம் தான் பெயர் தேவை குருவி,
இங்கு இனத்திற்குள்ளேயே பல பெயர்கள் குருவி,
ஆளுக் கொருபெயரும் அழைத்திட உண்டு,
அவை பின்னிலும் சாதி இணைப்பவருண்டு,
என் குருவி உன் இனத்தில் சாதிகள் இல்லை,
ஆண் பெண் எனவும் வேறுபாடு இல்லை,
நான் மீண்டும் பாரதி வேண்டுகிறேன்.
இச்சாதிச் சமுதாயத் திலிருந் தெம்மை மீட்க,
அன்றுன் னிடத்தில் வருவேன் என் குருவி
மனிதனாகப் பறந்திடவே.
சாதிக் களை விளைந்திருக்கு குருவி
சாதிக் களை விளைந்து படர்ந்திருக்கு..!!
குழந்தை பெயர் கேட்டா லறிந்திடும்,
பாலினம் போல – என் குருவி,
சாதிப்பெயர் கேட்டா லுடன் மதமும் தெரிந்திடுது.,
இனத்திற்கு இனம் தான் பெயர் தேவை குருவி,
இங்கு இனத்திற்குள்ளேயே பல பெயர்கள் குருவி,
ஆளுக் கொருபெயரும் அழைத்திட உண்டு,
அவை பின்னிலும் சாதி இணைப்பவருண்டு,
என் குருவி உன் இனத்தில் சாதிகள் இல்லை,
ஆண் பெண் எனவும் வேறுபாடு இல்லை,
நான் மீண்டும் பாரதி வேண்டுகிறேன்.
இச்சாதிச் சமுதாயத் திலிருந் தெம்மை மீட்க,
அன்றுன் னிடத்தில் வருவேன் என் குருவி
மனிதனாகப் பறந்திடவே.
என் தாத்தாவின்
தாத்தாவிற்கே தெரியாதாம்
நேற்றுவரை எங்கள் இடத்தை
ஆக்கிரமித்திருந்த
மிகப் பெரிய ஆலமரத்தின் வயது.
மலையிலிருந்து நீர் கொட்டுவதை "அருவி" என்று தமிழன் குறித்தான். நீர் உயரத்திலிருந்து ...கீழே விழுவதால் "வாட்டர் ஃபால்ஸ்" என்று ஆங்கிலத்தில் குறித்தார்கள். இதை மொழிபெயர்த்து நீர்வீழ்ச்சி என்று சொல்வது சரியா? அருவி இருக்க நீர்வீழ்ச்சி எதற்கு? தாய்ப்பால் இருக்கப் புட்டிப் பால் கொடுப்பதேன்?
கவிக்கோ.ஞானச்செல்வன்
நண்பர்கள் (4)

அழகேசன்Nc
தேனி

nilamagal
tamil nadu

ஜெனி
coimbatore
