உனக்கென

என் இரவுகளின் தூக்கங்கள்
உன்னால்தான் கலைகிறது
உரசி உரசி நீ செய்த
தொல்லைகள் தினமும் தொடர்கிறது

காதுகளில் நீ பேசிய –காதல்
மொழி இன்னும் ஒலிக்கிறது
என்னை மெல்லமாய் கடித்து
செல்லமாய் அடிகளும் பெற்றுக்கொள்கிறாய்

அத்தனை இரவுகளிலும் – உன்
ஆளுகையினால் என்னை
அயர வைக்கிறாய் – இன்று
உனக்கென வாங்கிவிட்டேன்
.......
ஓர் கொசுவத்திச் சுருள்

எழுதியவர் : சார்லிகிருபாகரன் (6-Dec-13, 6:41 pm)
Tanglish : unakkena
பார்வை : 117

மேலே