இரு விழி
காதல் ஒரு
கருப்பு சட்டை - அதை
அணிய தெரிந்தவர்க்கு
அது ஒரு அழகிய
தோற்றம்.................
உள்ளத்தை
மகிழ்ச்சியில் ஆழ்த்தும்
பூங்காவனம் உலகத்தை
மறந்த உறவு
நெருங்கிய தோழமை...............
இரு அன்பு
கொண்ட உயிரின்
அழகிய கதை
புதுமைகள் என்றும்
நீங்காத இடம்..........
பேசத்தெரிந்த
மழைத்துளி
கண்ணாம்பூச்சி
விளையாடும்
ஊமையின் உறவு
இரு மொழிகளின்
கூடாரம் ..
மறவாமல் இருக்கும்
இரு அழகிய உள்ளம்