நீயும் நானும்

ஆண்: நள்ளிரவும் முழு நிலவும் நீயும் நானும் மௌனமும்.
ஒன்றாய் ஓரிடத்தில்..!!
இந்த நிமிடம், இந்தத்தருணம்
தொலையாமல் தங்காதா?

பெண்: நள்ளிரவும் முழு நிலவும் நம்மை விட்டுப் போனாலும்
நான் இருப்பேன் உன் அருகினிலே…
இந்த நிமிடம் இந்தத் தருணம் எங்கும் போகாது
நம்முடனே தொடர்ந்திடும்…

ஆண்: இந்த உலகினில் நமக்கென்று ஓரிடம் தேடி பயணம் செய்வோம்
வெகுதூரத்தில் தனிமையில் குடில் அமைத்து புகுந்திடுவோம்
உனக்கென நானும் எனக்கென நீயும் நாமாக அங்கே வாழ்ந்திடுவோம்

பெண்: நிரந்தர இடமொன்று தேவையில்லை பயணிப்போம் இறுதிவரை
இந்த உலகமே தனிமைதான் நீ அருகில் இருந்தாலே..
நாமாக நாம் வாழ நாம் மட்டும் போதும்
நாமாக நாம் வாழ நாம் மட்டும் போதும்….

எழுதியவர் : பினு ஸ்ரீராம் (12-Jul-15, 1:22 pm)
Tanglish : neeyum naanum
பார்வை : 172

மேலே