யன்னல்

யன்னல்

கரம்புதைந்த
கன்னங்களெல்லாம்
கதைசொல்லுகிற புகலிடம்

மௌனங்களின் உறவுக்காரனென
மடிக்கொள்ளை கொள்ளுகிறது
விழிகள் உன்னிடம்

விரும்பிய நோட்டங்களுக்கு
விருந்தோம்பல் விழி விரும்பி

விழிகளின் கொள்ளைக்காரன்

வீதிகளின் விதிநாடி
விழிக்காதவர் பிரச்சினைகளிலே

நமக்கான தீராக்கணக்கென்பது
உறங்காத என் நாட்களிலே
சேர்ந்தே நாம் பேசாமலிருந்தது

உன் வாசகனல்ல நான்
என் காதலியும் அல்ல நீ

அயராத உளைச்சல்களில்
ஆறுதல் தந்திருக்கிறாய்

அடுத்தச் சுவர்
ஆடைத் தொங்கிதனிலே
அழலாடிடும்
என் அந்தரங்கங்களின்
பிரதிபிம்பமாகி விடுகிறாய்
சடுதியில் நீயே

உன்னை ஒட்டிக்கொண்ட
கண்ணாடித்திரை
நிறமாலைகளிலே
கொடியுதிர்த்த இலைகளென
காணாமல் தொலைகின்ற
என் சில நிகழ்(வு)காலங்கள்

அனுசரன்

எழுதியவர் : அனுசரன் (6-Dec-13, 2:15 pm)
பார்வை : 196

மேலே