நான் - என்ற எண்ணம் அழிய வேண்டும்

நிலவைக் காட்டி சோறூட்டினாள் அன்னை
விழியைக் காட்டி கவி ஏற்றினாள் காதலி
கண்ணில் கண்டதே கற்ற பாடம் ஆனதால்
கருத்தில் பதிந்தது ஏமாற்றம் மட்டுமே......!
நிலா நிலா ஓடிவராமல் வானத்திலேயே இருந்தது
நிச்சயம் திருமணமே என்றவள் ஏமாற்றினாள்...!
எனவே இனிமேல்.......
என்னைக் காட்டி நான் எனக்குள் படிப்பேன்...
எமனையும் ஏமாற்றி எளிதில் ஜெயிப்பேன்...
என்னை வெல்ல இறைவனை அழைப்பேன்
எழில் இறைவனை வெல்ல " நான் " இறப்பேன்..!