ஒற்றைப் பெயர்
எத்தனை முறை உச்சரித்திருப்பேன்
உன்பெயரை
அத்தனை முறையும் என்
அருகில் வந்திருக்கிறாய்!
என்விரல்களை பிடித்தபடி – நீ
நடந்த தூரங்களை நான் அறிந்ததில்லை
நான் விளிக்கவும், விழிக்கவும் காத்திருந்தாய்
என்னைப் பற்றியே உன் நினைவுகளை சுற்றவைத்தேன்
உன்னைச் சுற்றியே என்பயணங்களை முடிவு செய்தேன்
எத்தனை பெயரிட்டு என்னை அழைத்தாய் –நானோ
உனக்கு ஒற்றைப் பெயரிடுகிறேன்
அ.ம்.மா....