வாடுகிறது என் நிஜங்கள்

காற்றில் அவள் முகம்
பூவில் அவள் வாசம்
நீரில் அவள் குணம்
புல்லில் அவள் பாதப் பதிவுகள்

அவள்
அவள் தாய் கருவறைச் செதுக்கிய அழகிய சிற்பம்

எந்தன் சிந்தனையும் பார்வையும் அவளானாள்
நானோ அவள் நினைவில்
அவளோ ....?

புரிந்துக்கொள்
நீயில்லாத நாட்களில்
முகவரி அழிந்த மொட்டைக் கடிதாசியாகிறேன்
என் முதல்வரியும் முகவரியும் நீயே
என்னைவிட்டு செல்லாதே
என்னை மொட்டைக் கடிதாசியாக்காதே
நீ மற்றொரு கடிதாசிக்கு முகவரியானதால்
மொட்டைக் கடிதாசியானே

முகம் சுளித்து பார்க்காதே
மனம் சஞ்சலித்து போய்கிறது

என் மனதைத் திருடிய உன் நினைவுகள்
என் தூக்கத்தையும் திருடியது
இன்று
நான் காகித ஆலையில் மாட்டிக்க் கொண்டக் காகிதக் கப்பலானேன்

போதுமடி உன் செயல்கள்
வாடுகிறது என் நிஜங்கள்
கற்பனையும் முற்றுப் பெறலாம்
என் கண்ணீரும் கவிதைத் தீட்டலாம்
இனி தனி ஒரு தீவில் தொடரும் என் கனவுகள் ...

எழுதியவர் : harihari (6-Dec-13, 7:39 pm)
பார்வை : 109

மேலே