வளர் பிறை -3
அன்று ஜெனியின் பிறந்தநாள் ,,,,,,,,,,
அந்தோணியின் வீடே கலை கட்டி இருந்தது,,, எல்லாரும் சந்தோஷ வெள்ளத்தில் ,,, ஜெனி முதல் நாளே தன் தோழிகளையும், தன் (தோழர்)களையும் மாலை விருந்திற்கு அழைத்திருந்தாள்
ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர்,,, முதலில் வந்தது ஜெனியின் தோழிகள் தான்,,, லலிதா , சிந்து , லாவண்யா, ரேவதி எல்லோர் கையிலும் மலர் கொத்துகள், பரிசு பொருட்கள்
"ஆண்டி ஜெனி எங்க??"- கேட்டாள் லாவண்யா
"ஜெனி அப்பாவோட chruch போயிருக்காமா இப்ப வந்துடுவாங்க,,, வெயிட் பண்ணுங்க"- என்று வந்தவர்களை கவனித்து கொண்டிருந்தார்கள் மேரியும், துளசியும்,,,,,,,,
சிறிது நேரத்திலெல்லாம் ஜெனி வந்துவிட்டாள் அப்பாவோடு,,,,,,,
ஜெனியின் அண்ணன் அவன் அலுவலக நண்பர்களையும் அழைத்திருந்தார்,,, அவர்களை கவனித்து கொண்டிருந்தார்
அந்த சமயம் உள்ளே நுழைந்தான் ஹரி,,,, முழு பெயர் ஹரிஹரன்,,,, கையிலே பூங்கொத்து,,,, தயக்க நடை,,,
"யாருப்பா நீ"- கேட்டார் அந்தோணி
"நான் ஜெனி classmet "
"ஏன்ப்பா அங்கயே நிக்கிற உள்ளவா "
உள்ளே வந்தான்,,,,,,,
"வா ஹரி"-அழைத்தாள் ஜெனி
அப்படியே நேற்று மாலை ஹரியோடு நடந்த உரையாடல்கள் அவள் மனக்கண்ணில்
பள்ளி முடிந்து ஆனந்திற்காக ஜெனி காத்து கொண்டிருந்த சமயம் ,,,,,,,,,,,
"ஜெனி"
திரும்பி பார்த்தாள் ஜெனி,,, ஹரி நின்று கொண்டிருந்தான்
"ஹாய் ஹரி குட் ஈவிங்க்"
"குட் ஈவிங்க்"
"என்ன ஹரி வீட்டுக்கு போகலையா"
"இல்ல ஜெனி உன்கிட்ட கொஞ்சம் பேசணும்"
"சொல்லு ஹரி "
"வந்து ,,,,,,,, வந்து ஜெனி"
"தயங்காம சொல்லு ஹரி "
"I லவ் யு ஜெனி"- பதட்டத்தோடு சொன்னான் ,,, ஆனால் ஜெனியிடம் எந்த சலனமும் இல்லை
"என்ன சொன்ன மறுபடியும் சொல்லு"- அவன் கண்பார்த்து கேட்டாள்
அவனுக்குள் நடுக்கம் ஆரம்பம் ஆனது,,,, இருந்தாலும் சமாளித்துக்கொண்டு
"I லவ் யு ஜெனி"- என்றான் தைரியமாக
சற்று நேரம் அமைதியாக இருந்தாள் ஜெனி,,, அந்த அமைதி அவனை தின்றுவிடும் போல இருந்தது,,,,,,,,,,,,பின்
"சாரி ஹரி நான் உன்ன லவ் பண்ண முடியாது"
"ஏன் ஜெனி,, நான் உன் அளவுக்கு அழகா இல்லன்னு இப்படி சொல்றியா "- கண்கள் கலங்க கேட்டான்
"ச்ச அப்படி இல்ல ஹரி அழகு கண்ணுக்கு மட்டும் தான்,,,,,, அதுவும் கொஞ்ச நாளைக்கு தான் இருக்கும்,,, பட் காதல் மனசுல இருக்கணும்,,,,,,
ஹரி உன்ன என் நண்பன்தான் என்னால பாக்க முடியுது,,,,"
ஹரி அமைதியானான்
"இப்ப நான் சொல்றது உனக்கு கஷ்டமாத்தான் இருக்கும் ஆனா நீ நிதானமா யோசிச்சி பாரு,,,, நாம எப்போதும் நல்ல friends-ஆ இருக்கணும்னு நான் ஆசைபடுறேன்
நாளைக்கு எனக்கு பர்த்டே,,, நீ என்ன உண்மையா friend -ஆ நெனச்சா என் பர்த்டே பார்டிக்கு வா,,,,,, நீ வருவேன்னு நம்புறேன் "- என்று சொல்லிவிட்டு அந்த இடம் விட்டு நகர்ந்தாள்
இன்று அவன் ஜெனியின் நண்பனாக வந்து நின்றான் அந்த விருந்தில்,,,,,,, ஜெனியும் மகிழ்ந்தாள்
இந்த விஷயம் எப்படியோ தோழிகளிடம் கசிந்து விட்டது
ஜெனியை பிடித்துகொண்டார்கள்,,,,, "ஹே ஜெனி ஹரி உன்கிட்ட ப்ரொபோஸ் பண்ணுனானா டி" -கேட்டாள் லலிதா
"எப்புடி டி அதுக்குள்ள ,,,,,,,,"
"அதெல்லாம் விடு பண்ணுனானா இல்லையா"
"ஆமா பண்ணுனான் "
"நீ என்ன சொன்ன"
" வேண்டாம் friends -ஆ இருப்போம்னு சொன்னேன்,,,, அவனும் என்ன friend-ஆ ஏத்துக்கிட்டான்"
"ஏன் டி அப்படி சொன்ன,,, சும்மா கொஞ்ச நாள் லவ் பண்ணலாம்ல"- என்றாள் சிந்து
"லவ்-ஆ நானா "
"ஏன் டி நீ யாரையும் லவ் பண்ண மாட்டியா??? உனக்கு இது வரைக்கும் யார் மேலையும் லவ் வந்ததில்லையா?"- கேட்டாள் லாவண்யா
"நோ பா,,, எனக்கு லவ் வந்ததும் இல்ல வரவும் வராது"
"வராதுன்னு நீயே எப்டி சொல்ற "
"வராது,,,, வராது,,,,,, அவ்ளோ தான்"
"ஹே உன்னமாதிரி நெறையா பேர இந்த காதல் பாத்திருக்கு,,,,,,, உனக்கும் காதல் வரும்"
"பாக்கலாமா challenge "
"challenge "
"நான் ஜெயிச்சா எனக்கு உன் locket குடுக்கணும் நீ ஜெயிச்சா நான் இந்த செயின் தரேன்"- என்றாள் ஜெனி
"ஓகே டீல்"
இவர்கள் பேசிகொண்டிருக்கும்போதே,
"excuse me "
திரும்பினாள் ஜெனி,,,, அவன் நின்றான்,,,, அவன் சற்று அருகில் நின்றமையால் அவன் மீது மோத நேர்ந்தது ஜெனிக்கு ,,,,,,,,
அதனால் அவன் முகத்தை அருகில் பார்த்தாள் அவனை பார்த்த ஜெனி சட்டென்று மழைத்துளி நனைத்தது போல இருந்தது
இத்தனை நாளாக எந்த ஆடவரோடும் வராத ஒரு ஈர்ப்பு அவன் மேல் வந்தது ஜெனிக்கு,,,,,,,, அவள் கருவண்டு கண்கள் படபடக்க ஆரம்பித்தது
செயின் பறிபோய் விடுமோ ,,,,,,,,,,,,,??????????
(வளரும்,,,,,,,,,,,,,,)