இளமை காட்டில் தனிமை தீ

தனிமை என்பது எனக்கு
தனியே அல்ல ,
உன் நினைவுகளுடன் தான் .
காசு இல்லாமலும் காலம் தள்ளலாம் ,
உன் காதல் இல்லாமல் ???
பத்து நாட்கள் விட்டு சென்றாய்
பதியம் செய்த உன் நினைவுடன் ,
செத்திடாமல் பார்த்து கொள்கிறேன்
உன் நினைவை அல்ல என் உயிரை ..

காய்ச்சல் வந்தால் போர்த்திக் கொள்ளலாம் ,
காதல் வந்தால் உன் கண்கள் தானே
என் மருந்து..
நீ வாங்கி தந்த கடிகாரம் ,
நொடி நேரம் கூட ஓடாமல் ,
பொடி நடையாய் ,
நினைவு பொதி சுமந்து,
நிற்கிறது நேரம் செல்லாமல் ..

உன் விரலும் ,
நிதம் உன் இதழும் ,
தனை தொட ,
ஏங்கி நிற்கும் ,
என் உதடுகள் ,
ஈரம் இல்லாமல் ..

நீ வா ,
வந்தால் தான் ,
நான் நானாவேன் ..
உன் வாசம் இல்லா
வீடும் ,
உன் சுவாசம் இல்லா
காற்றும் ,
உன் ஸ்பரிசம் படா
என் உடலும்,
கசக்கிறது எனக்கு ..

நீ வரும் வரை ,
நம் வீட்டு கட்டில் ,
எனையும் சுமக்க
மறுக்கிறது,
தூக்கமில்லாமல் நான் ..

எழுதியவர் : VENBHAA (7-Dec-13, 1:54 pm)
பார்வை : 193

மேலே