வளர் பிறை -4
வந்தவனை விழிகொட்டமல் பார்த்தாள் ஜெனி,,, 
  "ஹலோ மிஸ் ஜெனி"- அவனே அவளை நிதானத்திற்கு கொண்டுவரும் அளவுக்கு அவனை பார்த்திருக்கிறாள் 
  "எஸ்"
  
  "wish  you  many  more  happy  returns  of  the  day  "- கையிலிருந்த பூங்கொத்துகளை அவளிடம் நீட்டினான் 
அவளும் பெற்று கொண்டாள் அவன் கண்களை பார்த்துக் கொண்டே,,,,,
   "சாரி நீங்க யாருன்னு,,,,,,,,?- தயக்கத்தோடு கேட்டாள் ஜெனி 
 அந்த சமயம் ஜெனியின் அண்ணன் வந்தார்,,,
 
 "ஹே ஜெனி நம்ம வீட்டுக்கு வருவாரே  திவாகர்  அங்கிள் அவரோட பையன்,,, அங்கிள்-அ பார்டிக்கு invite  பண்ணிருந்தேன் அவருக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லையாம் அதன் அவர் பையன் வந்துருக்காரு ,,,,இவர் பேர் ரகு"
    
  ஒரு நீண்ட விளக்க உரையே நிகழ்த்தினார் ஆனந்த் 
  "ஓகே டியர் டைம் ஆச்சு வா கேக் கட் பண்ணலாம்"-அழைத்தார் அந்தோணி 
   எல்லாரும் பிறந்தநாள் பாடல் இசைக்க, மெழுகுவர்த்தியை அணைத்தாள் ஜெனி,,,,,, கேக் வெட்டி,, அம்மா, அப்பா, அண்ணன், அண்ணி, தோழிகள் என ஊட்டிவிட்டாள்,,,,,,
   
     வந்தவர்கள் எல்லோரும் பரிசு பொருள்களோடு ஜெனியை சூழ்ந்து கொண்டார்கள்,,, ஆனால் ஜெனியின் பார்வையோ ரகுவை தேடியது எங்கே அவன்,,,,,,,,,,
    தேடி ஓய்ந்தது  தான்  மிச்சம்,,,,,,,,  அவன்  போய் விட்டான்,,,,,,,,,,
    அன்றிரவு ஜெனிக்கு தூக்கமே வரவில்லை,,,,,, மனம் ரகுவை தேடியே போனது என்ன செய்ய??? ஏன் இப்படி ?? இத்தனைக்கு அவன் தனிப்பட்ட முறையில் அவளிடம் எதுமே பேசவில்லை வாழ்த்து சொன்னதோடு சரி 
    இரவு தூங்காமலே விடிந்தது.......... காலையில் பள்ளிக்கு கிளம்பினாள் ஜெனி 
      வழக்கம் போல அவள் அண்ணன்  பைக்கில் பள்ளிக்கு  போனாள் ஜெனி
     ஏதும் பேசவில்லை ஆனந்திடம், சாலை ஓர கதாநாயகன்களை கவனிக்கவில்லை 
    பள்ளி வந்ததும் ஆனந்த் கேட்டார்,"ஜெனிமா "
  "அண்ணா"
  
  "உடம்பு ஏதும் சரியில்லையா??"
  "இல்லையே அண்ணா ஏன்?"
  "இல்ல எதுமே பேசாமல் வந்த அந்த பசங்கள கூட கண்டுக்கல,,, என்னாச்சு உனக்கு"
   சிறிது நேரம் அமைதிக்கு பிறகு, "ஒன்னும் இல்லை அண்ணா,,,,,,,, கொஞ்சம் தலை வலி"-என்றாள்,,, தன் அண்ணனிடம் முதல் பொய்,,,,,
   "tablet  ஏதும் வேணுமாடா,,,,,,, வேணும்னா வீட்டுக்கே போய்டுவோமா,,,,,,, டீ சப்டுரியா?? என்னடா இத வீட்டுலையே  சொல்லிருக்கலாம்ல"-என்று பதறினார் 
  "ஐயோ அண்ணா இது சாதாரண தலை வலி தான் இதுக்கே ஏன் இப்படி பதறுறீங்க,,,,, நான் பாத்துகிறேன் அண்ணா" -என்று சமாதானம் சொன்னாள்
   "என்னமோ மா ரொம்ப முடிலனா H.M -ட்ட சொல்லி எனக்கு கால் பண்ணு நான் வந்து வீட்டுக்கு கூட்டிட்டு போறேன் ஓகே வா"- சொல்லி கொண்டே தன் பைக்கை  ஓங்கி மிதித்தார்,,,,,
   தட,,, தட,,, தட நான் தயார் என்றது 
   
  "சரி அண்ணா"
   அவள் பதில் கேட்டு கிளம்பினார் ஆனந்த், ஜெனி பள்ளிக்குள் நுழைந்தாள்,,,,, எதுமே சாதாரணமாக இல்லை 
   எப்படியோ அந்த நாள் ஓடிற்று,,,,,,,,,,  அன்று மாலை ஜெனிக்கு ஒரு விபரீதம் காத்திருந்தது 
   ஜெனி பள்ளி முடிந்தது வரண்டாவில் தன் அண்ணனின் வரவுக்காக காத்திருந்தாள்,,, அப்போது 
     "ஜெனி"
  
   திரும்பினாள்,,,,,,, அவள் ஆசிரியர்,,,,,,, ஆனால் அவரின் குணம் அதற்கேற்றார்  போல இல்லை என்பது ஜெனிக்கும் தெரியும் 
     ஜெனியின்  அழகில் மயங்கியவர்களில் மிக முக்கியமானவர்,,,,,,, அவரது பள்ளி வேலை அனுபவத்தில் அதிக குற்ற பத்திரிக்கைகள் அவர் மேல் தாக்கல் செய்யப்பட தயாராக இருந்தது,,,,,
அதில் மிக முக்கியமானது பெண் பிள்ளைகளிடம் வரம்பு மீறி நடந்து கொள்கிறார் என்பது 
   இது ஜெனிக்கும் தெரியும் ,,, அதனாலே அவரிடம் எப்போதும் நான்கு அடி தள்ளியே இருப்பாள் 
   இன்று தனியே மாட்டி கொண்டாள்,,,
  
    "எஸ் சார்"
   "என்ன இங்க வீட்டுக்கு போகலையா,,,, "
   "இல்ல சார் அண்ணா இன்னும் வரல"
   "ஓகே எனக்கு ஒரு ஹெல்ப் பண்றியா??"
 
  "சொல்லுங்க சார்"
 
  "நான் கொஞ்சம் பேப்பர்-லாம் திருத்த வேண்டி இருக்கு,,,,, எனக்கு கொஞ்சம் என் பேனாக்கு இங்க போட்டு  வைக்கிறீயா,,, நான் ஸ்போட்ஸ் ரூம் வரைக்கும் போறேன் "
  முதலில் தயங்கினாள்,,,, அவர் பேனாவை அவள் கையில் கொடுத்து விட்டு அந்த இடம் விட்டு நகர்ந்தார் 
   ஜெனி அந்த பேனாவோடு  staff  ரூமிலுள்ள  இங்க pointer க்கு  போனாள்,,,
   அப்போது யாரோ கதவை தாழிடும் சத்தம் கேட்டது 
   திரும்பினாள் ஜெனி 
    அவன் தான்,,,,,,, அவரே தான்,,,,,,,,,,,,,,,,
  (வளரும்,,,,,,,,,,,,,,,)
 
                    
