அதி அழகான சித்திரங்கள் 01
சித்திரங்கள் வரையும் ஒரு சித்திரக்கார சிறுவன்
அதி அழகான காலையில் படுக்கையைவிட்டு எழுந்திருக்கிறான்
வாய் கழுவவுமில்லை, கொஞ்சம் முகமாவது கழுவிக்கொள்வான் என்றால்
அதுவுமில்லை
அன்று பாடசாலைக்கு விடுமுறை
இல்லாவிட்டாலும் குறைவான வரவுகள்தான் பதிவு புத்தகத்தில் இருக்கிறது
இவனிடம் அடிக்கடி ஒரு வாசம் வீசும் காற்றோடு காதல் செய்துகொள்ளும்
அது
பிஞ்சு மாங்காயின் பால்
சரி சித்திரக்காரன் சூரியனின் படத்தை இரவிலும்,
நிலாவின் படத்தை பகலிலும் வரைந்துவிட்டான்
குறும்பு
சூரியன் தேனின் நிறத்தில் இருக்கிறது
தேனைக்குழைத்து பூசியிருக்கிறான்
உடம்பில் சூடு பட்டுத்தெறிக்கும்போது
நாக்கு இனிப்பதற்கா
நிலவு : கறிவைக்க தாமதமான சுடுசோறு
சொன்னா சிரிப்பாங்க
பைசாலுக்கு பைத்தியம் பொய் சொல்லுகிறான்
நிலாவை "சுடும்சோறு" என்கிறான்
இல்லை
எனக்கு பசித்தும் சோறு கிடைக்காதபோது
நிலா எனக்கு சோறு போன்று காட்சி தரும்
இது எனது உண்மை
புகழுக்குரியவன் அல்லாஹ்