மங்கையின் உறக்கம்

வீட்டின் முற்றத்தை
வளைய வளைய
சுற்றி விளையாடிய சிறுமியாய்
வீட்டின் முற்றத்தில்
அமர்ந்து சடங்கு
நடந்த அந்த மங்கைக்கு
வீட்டின் முற்றத்தில்
அம்மாவிடம் நடந்ததை
சொல்லி சிரிக்கும் மாது
வீட்டின் முற்றத்திலே
உற்றார் நடுவில்
உறங்குகிறாள் அந்த பெண்
தன்னை ஒருதலையாய்
காதலித்த காதலனின்(பாதகனின்)
அமில வீச்சில் இன்று அதே
வீட்டின் முற்றத்தில்
புகைப்படமாய் சிரிக்கிறாள்
அந்த மடந்தை