Kavin Ganesh - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Kavin Ganesh |
இடம் | : Chennai |
பிறந்த தேதி | : 18-Jul-1995 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 10-Aug-2013 |
பார்த்தவர்கள் | : 260 |
புள்ளி | : 26 |
என் வாழ்நாள்
பயணத்திற்கு
இந்த எழுத்து
பயணம்
ஒரு பாதையாக
இருக்கும்..
என நம்புகிறேன்
கூண்டுக்குள் கிளிபோல
பெண்களை அடைத்திடுவார்
கூடவே சிறகுவெட்டி
திறமைகளை முடக்கிடுவார் ...!!
தன்னிலும் பேரெடுத்தால்
பொறாமையில் வெந்திடுவார்
தன்னிலை உணர்ந்தவுடன்
தாழ்ந்துமனம் வெம்பிடுவார் ....!!
தவறுகள் சுட்டிடிலோ
திமிரானவள் என்றுரைப்பார்
தட்டிக்கேட்டு விட்டாலோ
அடங்காப் பிடாரியென்பார் ....!!
குனியக்குனிய குட்டிடுவார்
நிமிர்ந்திடில் பழித்திடுவார்
குறைபேசிக் கழிப்பதனால்
குடும்பத்தில் அமைதியுண்டோ ...!!
மதித்து மனைவியை நேசித்தால்
இல்வாழ்க்கை இனிமையாகும்
மறுத்து வாட்டி வதைத்திடிலோ
இல்லறமே இம்சையாகும் ......!!!
அம்மா விரல் பிடித்து
அடி வைத்தது நினைவில்
உண்டு!
அப்பா கை பிடித்து
சைக்கிள் ஒட்டியது நினைவில்
உண்டு!
தம்பியுடன் சேர்ந்து மாங்காய்
அடித்து தின்றதும் நினைவில்
உண்டு!
ஆற்றங்கரையில் மீன் பிடித்து
சுட்டு தின்றதும் நினைவில்
உண்டு!
பூவரச இலையை மடக்கி
பீப்பீ ஊதியதும் நினைவில்
உண்டு!
பேப்பரை மடக்கி சிகரெட்
புகை ஊதியதும் நினைவில்
உண்டு!
தாத்தா நிலா சோறு
ஊட்டி விட்டதும் நினைவில்
உண்டு!
பாட்டி செய்த சீடை
திருடி திண்டதும் நினைவில்
உண்டு!
தாத்தாவுடன் கோமாளி சர்க்கஸ்
பார்த்து சிரித்ததும் நினைவில்
உண்டு!
சாமிக்கு பயந்து பாட்டி
சேலைக்குள் ஒளிந்ததும் நி
அம்மா விரல் பிடித்து
அடி வைத்தது நினைவில்
உண்டு!
அப்பா கை பிடித்து
சைக்கிள் ஒட்டியது நினைவில்
உண்டு!
தம்பியுடன் சேர்ந்து மாங்காய்
அடித்து தின்றதும் நினைவில்
உண்டு!
ஆற்றங்கரையில் மீன் பிடித்து
சுட்டு தின்றதும் நினைவில்
உண்டு!
பூவரச இலையை மடக்கி
பீப்பீ ஊதியதும் நினைவில்
உண்டு!
பேப்பரை மடக்கி சிகரெட்
புகை ஊதியதும் நினைவில்
உண்டு!
தாத்தா நிலா சோறு
ஊட்டி விட்டதும் நினைவில்
உண்டு!
பாட்டி செய்த சீடை
திருடி திண்டதும் நினைவில்
உண்டு!
தாத்தாவுடன் கோமாளி சர்க்கஸ்
பார்த்து சிரித்ததும் நினைவில்
உண்டு!
சாமிக்கு பயந்து பாட்டி
சேலைக்குள் ஒளிந்ததும் நி
மனங்கள் கலந்தோம்
மகிழ்வுடன் நிறைந்தோம்
மணநாள் கனவில்
மமகாரம் கொண்டோம் !
இதயம் பகிர்ந்தோம்
இதமாய்க் களித்தோம்
இளமைக் கனவில்
இனிதே மிதந்தோம் !
கண்ணேறு பட்டதோ
களங்கம் கற்பிக்க ...
கருத்தில் வேறுபாடு
கட்டாயப் பிரிவு ...!
அவளுக்கு கல்யாணம்
அழைப்பிதழ் வந்தது
அடைத்தது நெஞ்சம்
அழுகை வெடித்தது !
கட்டாயத் திருமணமாம்
கனடா மாப்பிள்ளையாம்
கடமைகள் முடித்துவிட
கடிதில் விவாகமாம் !
உடன்பாடு அவளுக்குண்டோ
உறவுகள் வற்புறுத்தலோ
உருகிடுதே என்மனமும்
உயிரென்னுள் துடிக்கிறதே !
நலப்பாடு எனக்கில்லை
நடந்ததை மறப்பேனோ
நன்காடு அழைக்கிறதே
நமன்வரக் காத்திருப்பேன்...!!
உலகின் எந்த
பகுதியிலும் இருப்பேன்
உன் நினைவோடு
தள்ளாடும் வயதிலும்
கை கோர்த்து நிற்பேன்
நான் உன்னோடு !!!
ஒத்த ரூபாய்க்கு
சாமானை மூட்டை
கட்டி வந்தார்
தாத்தா அன்று...
பாத்து ரூபாய்க்கு
ஒத்த மிட்டாய்
வாங்கி வந்தான்
தம்பி இன்று...
பூ போட்ட பாவாடையில்
மானாய் துள்ளி குதிக்கும்
சிறுமி
தாவணி பாவடையில்
மயிலாய் பள்ளி செல்லும்
மங்கை
ஆசிரியரின் காம பார்வையில்
புழுவாய் துடிதுடித்து போகிறாள்
பேதை
சக மாணவனின் சீண்டல்களால்
நூலாய் நொந்து போகிறாள்
பெண்
தன் மாமனின் இச்சைக்கு
ஆளாகிட கூடாது தவிக்கிறாள்
மாது
திருமணம் செய்த கணவனுடன்
நிம்மதியாக வாழ்கிறாள்
மடந்தை
நெருப்பாய் பார்க்கும் கொழுந்தனின்
பார்வையில் வெந்து போகிறாள்
செல்வி
இதுபோல் வாழ்க்கையில் பல
துன்பங்களை தகர்த்து நகர்கிறாள்
பெண்
சர்க்காரின் ஆணையோ
எழுதிய நோட்டுக்கள்
செல்லாது அடுத்த
ஆண்டின் துவக்கத்தில்
இருந்து
பள்ளியின் ஆணையோ
எழுதிய நோட்டுக்கள்
செல்லாது அடுத்த
மாத கட்டணத்தில்
இருந்து