நான்

வீட்டுக்குள் இருந்துகொண்டு
பல நூற்றுக்கணக்கான சூரியனைப் பார்த்திருக்கிறேன்
பல நூற்றுக்கணக்கான நிலாக்களை பார்த்திருக்கிறேன்
ஒன்றுமே இல்லாதது என் வீடு
கூரைக்குமேல் இத்தனை திருடர்களா?
லைட் அடிப்பது
என்று எண்ணி பயந்து மகிழ்ந்துமிருக்கிறேன்.

கோழியின் வயிற்றுக்குள்
இன்றைய முட்டை இருக்கிறதா
என்று விரல் விட்டு பரிசோதனை செய்து பார்த்திருக்கிறேன்.
குறுநெல் சோறாக்கி, கூடவே
முருங்கை இலை கறியுமாக்கி
சாப்பிட்டு சந்தோசங்களுக்குள்
மிதக்கும் எழை

எழுதியவர் : பைசால் இலங்கை (28-Jan-11, 5:19 pm)
சேர்த்தது : a.a.faisal
பார்வை : 521

மேலே